சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி! ரூ. 56 கோடி மதிப்புடைய போதைப்பொருள் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

Published : Sep 03, 2025, 11:05 AM IST

சென்னை விமான நிலையத்தில் எத்தியோப்பியாவிலிருந்து வந்த இரண்டு பயணிகளிடமிருந்து ரூ.56 கோடி மதிப்புள்ள 5 கிலோ 620 கிராம் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.

PREV
15

சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஆப்ரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவு போதை பொருட்கள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக வந்த ரக்சிய தகவலை தொடர்ந்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் கண்காணித்தனர்.

25

அப்போது வட மாநிலங்களைச் சேர்ந்த 2 பேர் சுற்றுலா பயணிகள் விசாவில் ஆப்பிரிக்க நாட்டிற்கு சென்று விட்டு சென்னைக்கு திரும்பி வந்தனர். வட மாநிலத்தைச் சேர்ந்த பயணிகள் டெல்லி அல்லது மும்பைக்கு செல்லாமல் சென்னைக்கு வந்ததால் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் 2 பயணிகளையும் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதை அடுத்து இருவரையும் விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, தீவிரமாக விசாரித்தனர். உடைமைகளையும் சோதனை நடத்தினர்.

35

அவர்களுடைய உடமைகளில் பெர்ரெரொ ரோச்சர் சாக்லேட்டுகள், கேன்கள் அதிக அளவில் இருந்தன. அவைகளை சுங்க இலாகா அதிகாரிகள் திறந்து பார்த்து சோதித்தனர். அதில் சாக்லேட்டுகளுக்கு பதிலாக கேப்சூல் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் கேப்சூல்களை ஆய்வு செய்த போது, இது சாக்லேட்களுக்கு பதில் பவுடராக இருந்தது. பவுடர்களை ரசாயன ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்ததில் கொக்கயின் போதைப் பொருட்கள் என்று தெரிய வந்தது. 2 பேரிடம் இருந்து 5 கிலோ 620 கிராம் கொக்கயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

45

இதையடுத்து இருவரையும், தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது சர்வதேச போதை கடத்தும் கும்பலுக்கு, கூலிக்காக போதை கடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து போதை பொருள் அடங்கிய சாக்லேட்கள் கொடுத்து இதை சென்னை விமான நிலையத்தில் சென்று இறங்கியதும் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் வாங்கிக் கொண்டு பணத்தை கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்றும் தெரிய வந்தது.

55

இதையடுத்து 2 பேரையும் கைது செய்து ரூ.56 கோடி மதிப்புடைய கொக்கையின் போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் மத்திய போதைப் பொருள் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிக்ள் நடத்திய விசாரணையில் மும்பை, டெல்லிக்கு போதை பொருள் கடத்தல் பயணிகள் வருவதாக தெரியவந்தது.மும்பைக்கு வந்த போதை கடத்தல் ஆசாமியும் டெல்லியில் நைஜீரிய வாலிபரும் பிடிப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் வந்து வாங்க இருந்த சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்த யார்? என்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Read more Photos on
click me!

Recommended Stories