காவல்துறையில் 3665 காலிப்பணியிடத்திற்கு தேர்வு.! தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Published : Sep 03, 2025, 10:24 AM IST

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 3,665 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வர்களுக்கு உதவிடும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறும்.

PREV
14
தமிழகத்தில் காவலர்கள் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 3,665 காலிப்பணியிடங்கள் கொண்ட இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் காவல் துறை இரண்டாம் நிலை காவலர்களுக்கு மொத்தம் 2833 பணியிடங்களும், 

சிறை மற்றும் சீர்திருத்த துறை இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் 180 இடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தீயணைப்பாளர் பணிக்கு 631 இடங்களும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி தேதியாக செப்டம்பர் 21ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

24
காவலர் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி

மேலும் விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான கடைசி தேதியாக செப்டம்பர் 25ஆம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எழுத்து தேர்வு நடைபெறும் தேதி நவம்பர் 9ஆம் தேதி என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்வுக்கு பல லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

மேலும் தேர்வுக்கு தயாராகும் வகையில் இரவு பகலாக படித்து வருகிறார்கள். இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவிடும் வகையில் இலவச பயிற்சி வகுப்பானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.

34
காவலர் தேர்வு - இலவச பயிற்சி

இது தொடர்பாக தருமபுரி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பானது 03.09.2025 முதல் துவங்கப்பட்டு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 8 இலவச மாதிரி தேர்வுகள் முறையாக திட்டமிடப்பட்டு 12.09.2025 அன்று தொடங்கப்பட்டு வாரந்தோறும் மாவட்ட அளவில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டடுள்ளது.

44
இலவச பயிற்சி வகுப்பிற்கு அழைப்பு

இந்த தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்தில் பள்ளிப் பாடபுத்தகங்கள் உட்பட 3,000 க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி, இலவச Wi-Fi மற்றும் இலவச கணினி பயன்படுத்தும் வசதி போன்ற தேர்வர்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://shorturl.at/B33H9 என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories