2500 ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்.! ஒரே உத்தரவு... துள்ளி குதித்து கொண்டாடும் பள்ளி கல்வித்துறை

Published : Sep 03, 2025, 09:17 AM IST

தமிழ்நாட்டில் 2500 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. தனி நீதிபதியின் இடைக்காலத் தடையை ரத்து செய்த நீதிமன்றம், நியமன உத்தரவுகளை வழங்க அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.

PREV
14
ஆசிரியர்கள் தேர்வு

பள்ளியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அரசு சார்பாக நேரடி தேர்வு நடத்தி 2500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 

இதனையடுத்து பணி நியமன ஆணை வழங்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில், பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யும் அரசின் முடிவை எதிர்த்து ஆசிரியர் அல்லாத பணியில் இருப்போர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு சேரவேண்டிய 2 சதவீத ஒதுக்கீடு வழங்காமல் மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கக்கூடாது என உத்தரவிடும்படி கோரிக்கை வைத்திருந்தனர்.

24
2500 ஆசிரியர்கள் பணி நியமனம்

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, 2 சதவீத இடத்தை இவர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல், நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 2500 பேரை பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யக்கூடாது என இடைக்காலத் தடைவிதித்து தீர்ப்பளித்திருந்தார்.

 இதனால் பணி நியமனத்திற்காக காத்திருந்த 2500 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து தனி நீதிபதி உத்தரவிற்கு தடை கேட்டு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நேரடி பணி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், யேமந்த் சந்திரகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

34
நீதிமன்றத்தில் முக்கிய வழக்கு

2500 பேர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனத்துக்காக ஏற்கனவே காத்திருக்கும் நிலையில், தனி நீதிபதி உத்தரவால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

 எனவே இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்துவிட்டு, 2500 பேருக்கு நியமனம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அப்போது கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், தமிழ்நாடு அரசின் சார்பில், தேர்வு மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

44
2500 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்

இதைக்கேட்ட நீதிபதிகள்ஆர்.சுரேஷ்குமார், யேமந்த் சந்திரகவுடர் ஆகியோர், நேரடி நியமனங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2500 பேருக்கு அரசு பணி நியமன உத்தரவுகளை உடனே வழங்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர். பணி நியமனம் செய்தது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவும், அடுத்தகட்ட விசாரணைக்காகவும் வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read more Photos on
click me!

Recommended Stories