இந்நிலையில் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 17-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரையிலும், 1 முதல் 3 வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.