120 சவரன், 38 லட்சம் சொகுசு கார் கொடுத்தும் வரதட்சணை டார்ச்சரால் பெண் தற்கொ**! குடும்பத்தையே அலேக்கா தூக்கிய போலீஸ்!

Published : Aug 07, 2025, 12:39 PM IST

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ப்ரீத்தி என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 120 பவுன் நகை, 25 லட்சம் பணம், கார் வரதட்சணையாக கொடுத்தும் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவரும், மாமியாரும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

PREV
15

திருப்பூரில் ரிதன்யா திருமணமான 77வது நாளில் 300 சவரன் நகை, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் கொடுத்தும் வரதட்சணை கொடுமை உடல் மற்றும் மன ரீதியான சித்ரவதை செய்யப்பட்டதை அடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதே திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ப்ரீத்தி என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

25

திருப்பூர் தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி சுகந்தி இவர்களது ஒரே மகள் ப்ரீத்தி (26). குப்புசாமி 2 ஆண்டுக்கு முன் இறந்து விட்ட நிலையில், பிபிஏ பட்டதாரியான ப்ரீத்திக்கும் ஈரோடு நசியனூரை சேர்ந்த விஜயகுமார்- உமா தம்பதி மகன் சதீஸ்வர் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி திருமணம் நடைபெற்றது. 

35

திருமணத்தின் போது 120 பவுன் நகை, 25 லட்சம் பணம், 38 லட்சம் இன்னோவா கார் உள்ளிவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இவ்வளவு நகை, பணம் கொடுத்தும் ப்ரீத்தியிடம் அவரது கணவரும், மாமியாரும் கூடுதல் வரதட்ணை கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 11ம் தேதி ப்ரீத்தி தனது தாய் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டார்.

45

ப்ரீத்தி குடும்பத்தினருக்கு சின்னக்கரையில் ஒரு டையிங் நிறுவனத்தை விற்பனை செய்தனர். இதில் ப்ரீத்திக்கும் பங்கு உள்ளது என்பதை அறிந்த சதீஸ்வர், மனைவியை தொடர்பு கொண்டு வீடு கட்ட ரூ.50 லட்சம் வாங்கி வரும்படி கேட்டுள்ளார். இதனால் ப்ரீத்தி மிகவும் மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ப்ரீத்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ப்ரீத்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 10 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

55

அதோடு பிரீத்தியின் உடலை வாங்க குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். வரதட்சணை கொடுமைக்கு காரணமாக இறந்த ப்ரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நல்லூர் போலீசார் மூன்று பேரையும் இன்று ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் மூவரையும் பிடித்து விசாரணைக்காக அழைத்து வந்த நிலையில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். பிரீத்தியின் கணவர் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories