மாதம் ரூ. 8000ஆயிரம் உதவித்தொகை.! மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- அரசு அசத்தல் அறிவிப்பு

Published : Aug 07, 2025, 12:15 PM IST

தமிழ்நாட்டில் ஐடிஐ படித்த மாணவர்களுக்கு இலவச பயிற்சியுடன் மாத உதவித்தொகையும் வழங்கப்படும். சென்னையில் ஆகஸ்ட் 11, 2025 அன்று தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறும்.

PREV
14
மாணவர்களுக்கான திட்டங்கள்

மத்திய மற்றும் மாநில அரசு மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது. 

இத்திட்டம் பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைப்பதற்கும், அவர்களின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உதவுகிறது. மேலும் அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியின் போது மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது மாணவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.

24
ஐடிஐ மாணவர்களுக்கு பயிற்சி

இந்த நிலையில் ஐடிஐ படித்த மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்குவதோடு மாத உதவித்தொகையும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் 11.08.2025 அன்று நடைபெறவுள்ளது.

 மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசின் தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

34
தொழிற் பழகுநர் பயிற்சி

பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியார்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela) வருகிற 11.08.2025 அன்று காலை 9.00 மணியளவில் வடசென்னை-21, ஆர்.கே.நகர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (வடசென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில்) நடைபெற உள்ளது.

44
8ஆயிரம் உதவித்தொகை

இதில் அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க ஐ.டி.ஐ படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற் பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர். தற்போது தொழிற் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்த பட்சம் ரூ.8000/- மற்றும் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate) வழங்கப்படும்.

இதுவரை தொழிற் பழகுநர் பயிற்சி (NAC) முடிக்காத அரசு, தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் http://www.apprenticeshipindia.gov.in கல்வி சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories