எனது வியர்வையில் வளர்க்கப்பட்ட பாமகவை சூது செய்தும், வஞ்சகம் செய்தும் என்னிடம் இருந்து அபகரிக்க அன்புமணி முயற்சி செய்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பாமகவை நான் ரத்தம் சிந்தியும், வியர்வை சிந்தியும் வளர்த்தேன். இது எனது வியர்வையால் வளர்ந்த கட்சி. இந்த கட்சியின் நிறுவனரும் நான் தான், கட்சியின் தலைவரும் நான் தான். அன்புமணி வஞ்சனையாலும், சூது செய்தும் கட்சியை கைப்பற்றி முயற்சி செய்கிறார்.
நிறுவனரும் நானே, தலைவரும் நானே
அன்புமணிக்கு நான் வழங்கிய தலைவர் பதவிக்கான காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. தலைவர் பதவி நிறைவு பெற்ற பின்னர் அவருக்கு செயல் தலைவர் என்ற பொறுப்பை வழங்கி மக்களை சந்திக்குமாறு கூறினேன். ஆனால் அந்த வேலையை செய்யாமல் வேறு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்.
23
வாய் கூசாமல் பொய் சொல்லும் அன்புமணி
அன்புமணி, தன்னை சந்திப்பதற்காக தைலாபுரம் வந்ததாகவும், என்னை சந்திப்பதற்காக வந்து அவரை சந்திக்க நான் மறுத்ததாக வாய் கூசாமல் பொய் சொல்கிறார். அப்படி என்னை சந்திப்பதற்காக யாரும் வரவில்லை. யார் வரும்போதும் நான் கதவை சாத்தி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர் பை பையாக பொய் பேசி வருகிறார்.
பாமக.வினர் என்னை கடவுளாக நினைக்கிறார்கள்
நான் பாமக.வின் நிறுவனராக இருந்தாலும், கட்சியில் உள்ள சொந்தங்களில் சிலர் என்னை கடவுளாக நினைக்கிறார்கள். அப்படி நினைத்தவர்களில் சிலரை அன்புமணி பணத்தாசையை காட்டி தனது பக்கம் இழுத்துக் கொண்டுள்ளார்.
33
பிளவு எங்கிருந்து வந்தது?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையில், அடுத்து வரக்கூடிய 2025 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன் என்பதால் என்னை எதிர்த்து நிற்கிறார்.
மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தேன்
அன்புமணிக்கு நான் எந்த வகையில் குறை வைத்தேன்? நன்றாக படிக்க வைத்து எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் அழகு பார்த்தேன். ஆனால் இன்று என்னை எதிர்த்து நிற்கிறார் என்று கூறி தனது ஆதங்கத்தை பதிவு செய்தார்.