அதற்கு காரணம் அதிகார பீடத்தில் அமர்ந்து கொண்டு பெரியாரீயத்தை பேசும் துணிச்சல் காரர் கலைஞர். ஆட்சி அதிகாரி பிடித்திருந்து கொண்டே அண்ணாவின் அரசியலில் இன்னும் ஆழமாக பேசியவர் கலைஞர். ஆனால், நான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை அவமதிக்கும் நோக்கில் பேசிவிட்டதாக கட்டமைக்கப் பார்க்கிறார்கள். எனவே, அவர்கள் எதுவேண்டுமானாலும் பேசிவிட்டு போகட்டும். மேலும், தமிழ்நாடு அரசு ஆணவ கொலைகள் தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.