உடல்நிலை பாதிக்கப்பட்ட தயாநிதி அழகிரி
2011ஆம் ஆண்டு தமிழிகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பெரிய அளவில் படம் தயாரிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்து வந்த வந்த தயாநிதி அழகிரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்பட்டது. இதனால் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த தயாநிதி அழகிரியை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவரது உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் மூளையில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த வித பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதன் காரணமாக சுமார் 6 மாதங்களுக்கு பிறகு வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.