சூப்பர் சான்ஸ்.! கொட்டிக்கிடக்கும் வேலை.! உடனே விண்ணப்பிக்க அழைப்பு விடுத்த தமிழக அரசு

First Published | Sep 24, 2024, 5:04 PM IST

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் செப்டம்பர் 27 ஆம் தேதி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாகவும் இந்த முகாமில் 8வது படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு

தமிழகத்தில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கல்வி, தொழிற்கல்வி, கல்லூரி என முடித்து வேலையை தேடி வெளியே வருகின்றனர். அந்த வகையில் வேலை இல்லாதவர்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி அளித்து வாழ்க்கையை முன்னேற்றி வருகிறது. தமிழக அரசு பணியில் காலியாக உள்ள 75ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் இன்னும் 6 மாத காலத்திற்குள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக தேர்வும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் அரசு பணிக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு பயிற்சி அளித்து கடனுதவிக்கான வழியையும் காட்டி வருகிறது. 
 

jobs

வேலைவாய்ப்பு முகாம்

இந்தநிலையில் அரசு துறையில் வேலை கிடைக்காதவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் வேலையும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு தனியார் நிறுவனங்களோடு இணைந்து வேலை வாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர்  ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்

Tap to resize

சென்னையில் பிரம்மாண்ட வேலை வாய்ப்பு

தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை 32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது
 

job fair

உடனே விண்ணப்பிக்க அழைப்பு

இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ . டிப்ளமோ. கலை. அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.

வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in ) பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Latest Videos

click me!