Minister Duraimurugan: அமைச்சர் துரைமுருகனுக்கு என்ன ஆச்சு? தனியார் மருத்துவமனையில் அனுமதியால் பரபரப்பு!

Published : Oct 24, 2024, 07:29 PM ISTUpdated : Oct 25, 2024, 12:58 PM IST

உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

PREV
14
Minister Duraimurugan: அமைச்சர் துரைமுருகனுக்கு என்ன ஆச்சு? தனியார் மருத்துவமனையில் அனுமதியால் பரபரப்பு!

திமுகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் துரைமுருகன்(86) தற்போது தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ளார். வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. 

24
Duraimurugan

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் துரைமுருகனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படும் துரைமுருகன் மருத்துவமனைக்கு சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து வருவதுமாக இருந்தார். 

இதையும் படிங்க: Job Vacancy: டிகிரி முடித்தால் போதும்! யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை! மாதம் ரூ.85,920 வரை சம்பளம்!

34

இந்நிலையில் காட்டிபாடியில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் சென்னை செல்ல முயன்ற போது அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள் உடனை அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க:  Chennai Secretariat Building: தலைமைச் செயலகத்தில் அதிர்வு? அலறியடித்து வெளியே ஓடிய ஊழியர்கள்! நடந்தது என்ன?

44

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவரது உடல் நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories