Omni Buses: பொதுமக்களே ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கிறாங்களா? அப்படினா உடனே இதை செய்யுங்கள்!

First Published | Oct 24, 2024, 6:58 PM IST

Omni Buses: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்களை 1800 425 6151 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

தமிழ்நாட்டில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள் உள்ளன. இந்த ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பண்டிகை நாள்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளையடித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதுவும் பண்டிகை காலங்கள் வந்தால், அதற்கு ஆகும் செலவுகளை விட பொதுமக்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கும் ஒன்று ஆம்னி பேருந்து கட்டணங்கள்.

அதிக விலைக்குக் கட்டணத்தை உயர்த்தும் பேருந்து நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். பண்டிகை நாள்கள் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாள்களாக இருந்தாலும், வார இறுதி நாள்களிலும் இது போன்ற கட்டண உயர்வு தொடர்கதையாகவே இருக்கிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கூடுதல் கட்டணம் வசிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளார். 

Tap to resize

இந்நிலையில் தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை கட்டுக்குள் வைப்பது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கூடுதல் கட்டணம் இல்லாமல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்.

ஆம்னி பேருந்துகளில் அதிகம் கட்டண வசூலிப்பதாக பெறப்படும் புகார்களையடுத்து, அரசு சார்பில் Toll Free எண் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 1800 425 6151 எண்ணில் பெறப்படும் புகார்களின் அடிப்படையில் கட்டணத்தை திருப்பிச் செலுத்துதல், விதிமீறலுக்கான அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு ஏதேனும் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டண வசூலிப்பதாக எங்களுக்கு புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது நிச்சயம் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். 

பயணத்தை முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளுக்கு எந்தவித போக்குவரத்து பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. ஆம்னி பேருந்துகளைத் தொடர்ந்து இயக்கும் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்துவதில்லை. சங்கத்தின் தொடர்பு இல்லாமல், புதிதாக பேருந்துகளை இயக்குவோர் கட்டணத்தை உயர்த்துகின்றனர் என தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!