தமிழ் விரோத அரசு திமுக
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், தமிழக அரசு மருத்துவம், பொறியியல் படிப்பை தமிழில் தொடங்கவில்லை. இதற்கான புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பு கூட செய்யவில்லை. எனவே திமுக அரசு தமிழ் விரோத அரசாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் உரிய நேரத்தில் உடன்பாடு எட்டப்படும். சரியான நேரத்தில் முடிவை நாங்கள் அறிவிப்போம். தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு ஊழலில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. ஆகையால் மக்கள் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற தயாராகிவிட்டனர் என்று கூறியிருந்தார். இந்த கருத்தை எக்ஸ் சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டிருந்தார்.
அமித்ஷாவிற்கு திமுக பதிலடி
இந்நிலையில் அமித்ஷாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பொய்கள், பொய்கள், பொய்கள் - பாஜக வழங்குவது அவ்வளவுதான். இந்த முட்டாள்தனத்தை உண்மைகளுடன் உடைப்போம். தமிழ்நாடு ஏற்கனவே பொறியியல் கல்வியை தமிழில் வழங்கி வருகிறது. 2010 முதல், அண்ணா பல்கலைக்கழகம் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் படிப்புகள் தமிழ் வழியில் வழங்கி வருகிறது.
இதையும் படிங்க: வசமாக சிக்கிய மிதுன்! அமித் ஷாவிடம் இபிஎஸ் சரண்டராக இதுதான் காரணம்! அதிமுக முன்னாள் நிர்வாகி பகீர்!
கலைஞர் கருணாநிதி
இதை யார் சாத்தியமாக்கினார்கள்? என்றால் அப்போதைய திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மறைந்த கலைஞர் கருணாநிதி. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தமிழில் மருத்துவக் கல்வி ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.
இறந்த மொழியான சமஸ்கிரும்
ஜனவரி 2024 முதல் அதாவது ஒரு வருடத்திற்கும் மேலாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகம் (TNTBESC), மாணவர்களுக்கான கிரேயின் உடற்கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் கைட்டன் மற்றும் ஹால் பாடநூல் போன்ற முக்கிய மருத்துவப் பாடப்புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டது. இளநிலை மருத்துவ மாணவர்களுக்காக மொத்தம் 13 தமிழ் புத்தகங்களை 50 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு உருவாக்கி வருகிறது. தமிழ் அடையாளத்தை அழிக்க விரும்புவது பாஜக தான். அதனால்தான் இறந்த மொழியான சமஸ்கிருதத்திற்கு நூற்றுக்கணக்கான கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழுக்கு எந்த நிதியும் வழங்கவில்லை.
இதையும் படிங்க: 100 நாள் வேலைத்திட்டத்தை ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இரக்கமற்ற பாஜக அரசு! முதல்வர் ஸ்டாலின்!
பாஜகவின் தமிழர் விரோத பிரச்சாரம்
பாஜக மற்றும் அதன் தலைவர்களின் அப்பட்டமான பொய்களை மக்கள் புரிந்துகொள்கிறார்கள். பாஜகவின் தமிழர் விரோத பிரச்சாரம் பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் மண்ணில் வேலைக்கு ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.