Tiruchendur temple special darshan முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு தினந்தோறும் தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோயிலில் அதிகளவு கூட்ட நெரிசல் காரணமாக பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயில், பழனி கோயில் என தொடர்ந்து பக்தர்கள் கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் திருச்செந்தூரில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
அதன் படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்கின்றனர். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் திருச்செந்தூர் கோவிலில் 3 மணி நேரம் முதல் 7 மணி நேரத்திற்கும் மேலாக சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் தற்போது பெரும்பாலான பள்ளியில் தேர்வுகள் நிறைவடைந்த்ள்ள கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.
tiruchendur
சிறப்பு தரிசனத்தால் பக்தர்கள் அவதி
இதனையடுத்து கோவிலுக்கு அதிக அளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள். அப்படி வருகை தரும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் என்ற பெயரில் வி.ஐ.பிக்கள் தரிசனம் செய்ய வருபவர்களால் மேலும் அதிக நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே பக்தர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் நலனுக்காகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று (30.03.2025) முதல் புதிய நடைமுறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
சிறப்பு தரிசனம் இல்லை
ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய நாட்களில் சிறப்பு தரிசன அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம், முதியோர்களுக்கான தரிசனம் ஆகியவை வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.