பள்ளிகள் விடுமுறை தொடர்பாக! அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்!

Published : Oct 22, 2025, 02:48 PM IST

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற பயிலரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார். அப்போது மழைக்காலங்களில் பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மேலும், தனது அழுகை வீடியோ குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.

PREV
13
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் "தமிழ் முழக்கம்" மேடைப்பேச்சு - ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்க தொடக்க விழா நடைபெற்றது. அக்டோபர் 22 முதல் 27ம் தேதி வரை நடைபெறும் பன்னாட்டு பயிலரங்க தொடக்க விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், பேச்சாளர் சுகிசிவம், உலக தமிழ் சங்க இயக்குனர் பர்வீன் சுல்தானா எம்எல்ஏ தளபதி மற்றும் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.

23
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

விழாவிற்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில்: பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் மின் கசிவுகள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியளர்களே முடிவு எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் சொல்லக்கூடிய SOP (Standard Operating Procedures) பின்பற்ற வேண்டும்.

33
கரூர் சம்பவம்

இதனை தொடர்ந்து கரூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழுத வீடியோ காட்சிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து பேசுவது குறித்த கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்து பேசுகையில்: உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும். இது பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குக்கு சமமானது, அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்று இருந்தால் மரத்திற்கு சமமானது என வள்ளுவர் கூறியுள்ளார். முதலில் நாம் மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு தன்னை மனிதனாக மறந்து விட்டான் என கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories