அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடியாக பறந்த முக்கிய உத்தரவு.! மாணவர்கள் குஷியோ குஷி

Published : Oct 09, 2024, 07:08 AM ISTUpdated : Oct 09, 2024, 07:09 AM IST

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைக்கு பின்னர் தற்போது ஸ்பெஷல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பாடங்கள் பாதிக்கப்படுவதால் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இதனையடுத்து சிபிஎஸ்சி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

PREV
15
அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடியாக பறந்த முக்கிய உத்தரவு.! மாணவர்கள் குஷியோ குஷி

பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்தால் சந்தோஷமாக துள்ளி குதிப்பார்கள். அந்த வகையில் மாணவர்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என பள்ளி நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களாக மாற்றி அமைக்கப்பட்டது. இருந்த போதும் இந்த விடுமுறை மட்டுமா கூடுதல் விடுமுறை கிடைக்காதா என மாணவர்கள் தவித்து வந்தனர். அவர்களுக்காக அவ்வப்போது உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

25

மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

ஆனால் தொடர் விடுமுறை காரணமாக பள்ளிகளில் பாடங்கள் முடிக்க முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது இதனை கருத்தில் கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இது பக்கம் நன்மை என்றால் மறு பக்கம் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காகவே பள்ளிக்கல்வித்துறையை தமிழக அரசு தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறது.

அந்த வகையில் மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களை பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறது. மேலும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாடபுத்தகம், புத்தகப்பை, இலவச சைக்கள், லேப்டாப் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

35

மாணவர்கள், பெற்றோர்கள் மன ரீதியாக பாதிப்பு

தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு மாணவர்களும் பாடங்களை கற்று வருகின்றனர். மாநில அளவில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் பள்ளியானது மாலை 4 மணிக்கு முடிவடைகிறது. 

ஆனால் தனியார் பள்ளிகள் ஆண்டு தோறும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தால் பல வகையிலும் முயன்று வருகிறது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் பள்ளிகளை நடத்துவது. சிறப்பு வகுப்பு நடத்துவது,இரவு வகுப்பு நடத்துவது, ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது  என மாணவர்களை மன ரீதியாக பாதிக்கவைப்பதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டிருந்தது.

45

சிறப்பு வகுப்பிற்கு தடை

இந்தநிலையில்  விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளிகளில் காலை 7:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை வகுப்பு நடத்தப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் சென்றது. மேலும் இரவு வரை வகுப்பு நடத்துவதால் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிட்டது. 

55

ஆட்சியர் அதிரடி உத்தரவு

இந்தநிலையில் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரசு விடுமுறை அறிவித்த நாட்கள், தேர்வு மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளிகள் இயங்கவோ, சிறப்பு வகுப்புகள் நடத்தவோ கூடாது என மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளி தளாளர்கள், முதல்வர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் காரணமாக தற்போது பள்ளிகள் மாலை 5.30 மணிக்கு முடிவடைகிறது. இதனால், பெற்றோர், மாணவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
 

Read more Photos on
click me!

Recommended Stories