New Ration Card: புதிய ரேஷன் கார்டு எப்போ கிடைக்கும்? காத்திருந்த மக்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்.!

Published : Jul 09, 2026, 06:44 PM IST

Ration Card: தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்த புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. விண்ணப்பித்து காத்திருக்கும் தகுதியான நபர்களுக்கு இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்.

PREV
14

தமிழகம் முழுவதும் 2 கோடியே 28 லட்சத்து 41,335 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளன. இதன் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அரிசி, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

24

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும், புதிய ரேஷன் கார்டு கேட்டு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆன்லைன் மூலம் தொடர்ந்து விண்ணப்பித்து வந்தனர். இதனிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கடந்த மார்ச் 31ம் தேதி வரை இப்பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

34

தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதாவது முதல் முறையாக தேர்தலை சந்தித்த விஜய் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றார். புதிய அரசு அமைந்த பின்னரும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படாததால் இருந்து வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

44

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன்: புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் விண்ணப்பதாரர்களில் தகுதியானோருக்கு புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கும் பணி முறைப்படி தொடங்கும் என தெரிவித்தார். மேலும் மக்களுக்கான சேவைகளை செய்யும் போது, அதை பொறுக்க முடியாதவர்கள், வழக்கறிஞர் நியமனத்தில் பணம் வாங்கியதாக கூறுகின்றனர் என கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories