தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றனர். இதன் மூலம் 2 கோடியே 28 லட்சத்து 41,335 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளன. இதன் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அரிசி, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கி வருகிறார்கள். அதுமட்டுமல்ல அரசின் எந்தவொரு திட்டங்களாக இருந்தாலும் சரி ரேஷன் கார்டுகள் இருந்தால் மட்டுமே பெற முடியும். குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டம், பொங்கல் பரிசு தொகுப்பு, வெள்ள நிவாரணம் போன்றவைகள் ரேஷன் அட்டைகள் இருந்தால் மட்டுமே வாங்க முடியும்.