சம்பளம் கட் மட்டுமல்ல ஒழுங்கு நடவடிக்கையும்.! ஊழியர்களுக்கு தமிழக அரசு திடீர் எச்சரிக்கை

Published : Jul 08, 2025, 05:14 PM ISTUpdated : Jul 08, 2025, 05:35 PM IST

 நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பள நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

PREV
14
இந்தியா முழுவதும் நாளை வேலை நிறுத்தம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு மற்றும் வங்கித் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் நாளை பொது வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.  

24
வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த சங்கங்கள்

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க திமுகவின் தொழிற்சங்கமான தொமுச, சிஐடியூ உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த பந்த் அறிவிப்பால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டது.  குறிப்பாக அரசு பேருந்துகள் சேவை பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. தமிழகத்தை பொறுத்த வரை தொமுச மற்றும் சிஐடியூ முக்கிய சங்கங்களாக உள்ளது. எனவே இந்த போராட்டத்திற்கு இந்த அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் பேருந்து இயக்கம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அதே நேரம் அதிமுகவின் தொழிற்சங்கம் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது சற்று ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது. இதே போல பெரும்பாலான ஆட்டோக்களும் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதனிடையே நாளை நடைபெறவுள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பளம் நிறுத்தம், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

34
அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

இந்த நிலையில், தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது என்றும், மீறி பங்கேற்றால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையுடன், நோ வொர்க் நோ பே என்ற அடிப்படையில் நாளை சம்பளம் வழங்கப்படாது என்றும் தெரிவித்திருக்கிறார் .

44
சம்பளம் கட், ஒழுங்கு நடவடிக்கை

பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் கூட, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத அளவிற்கு பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories