tiruvannamalai
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்
திருவண்ணாமலையில் தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. அண்ணாமலையார் கோவிலில் உலகப் புகழ் பெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவானது வருகிற 13-ம் தேதி அண்ணமலையார் கோயில் கருவறையில் அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் 2ஆயிரத்து 668 அடி உயர மலையின் மீது மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகைபுரியவுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டியது.
tiruvannamalai landslide
நிலச்சரிவு- 7 பேர் பலி
இதனால் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பெரிய அளவிலான பாறைகள் வீடுகள் மீது சரிந்தது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் மண்ணில் புதைந்தனர். பல கட்ட போராட்டத்திற்கு பிறகு இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் திருவண்ணாமலை மீதுள்ள பாறைகள் மற்றும் மண்கள் உறுதியாக இல்லாத நிலையில் இருப்பதாக வீடியோ மூலம் தகவல்கள் பரவியது. இதனையடுத்து மலையில் தற்போது உள்ள நிலைமை குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து தமிழக அரசிடம் அறிக்கை அளித்தனர்.
tiruvannamalai landslide
திருவண்ணாமலையில் நிபுணர்கள் ஆய்வு
இது தொடர்பாக அறநிலையத்துறை அமைச்ச்சர் கூறுகையில், தீப திருவிழாவின் போது மலை மீது மக்கள் அனுமதிப்பது குறித்து நிபுணர் சரவண பெருமாள் ராஜா தலைமையில் 8 பேர் கொண்ட நிபுணர்கள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளதாக தெரிவித்தார். அதன் திருவண்ணாமலை மலை மீது அதிகமானோர் ஏறக்கூடாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
எனவே கார்த்திகை தீப திருவிழாவின் போது பக்தர்கள் மலை மீது ஏற அனுமதியில்லையென தெரிவித்தார். பக்தர்கள் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் முறையாக அறிவிக்கும் என கூறினார்.
tiruvannamalai
தேவைப்படும் மனித சக்தி மட்டுமே மலை மீது அனுமதி
அதே நேரத்தில் தீப திருவிழாவுக்கு பயன்படுத்தப்படும் 350 கிலோ கொப்பரை, 450 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்ல எவ்வளவு மனித சக்தி தேவைப்படுமோ அவ்வளவு மனித சக்தி மட்டுமே மலை மீது அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.