மழை வெளுக்கப்போகுது.! இந்த ஊருக்கு மட்டும் 3 நாட்களுக்கு போயிடாதீங்க-தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்

First Published | Dec 11, 2024, 8:48 AM IST

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மீண்டும் பருவமழை தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

Tamil Nadu Rains

கனமழை -ஆட்டம் ஆரம்பம்

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையின் அடுத்த ஆட்டம் தற்போது தொடங்கியுள்ளது. அதன் படி கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி,  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிவருகிறது. இது  இலங்கை -தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து இன்று முதல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடங்கியுள்ளது.
 

heavy rain in tamilnadu

சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு

இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில், சென்னை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் காலையில் இருந்து  மழை தொடங்கி மாலை/இரவில் மழை தீவிரம் பெறும். சென்னையிலிருந்து மிக தொலைவில் தாழ்வு பகுதி உள்ளது என்றாலும்,

தாழ்வின் வடபுறம் கனமழை பெய்யும் பகுதிகளாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும்  சென்னையில் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும். சென்னைக்கு அதீத மழை பெய்யாது ஆனால் கன மழை பெய்யும். புதுச்சேரி - விழுப்புரம் - திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி அருகே உள்ள மற்ற பகுதிகளிலும் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார். 

Tap to resize

delta rain alert

ஹாட் ஸ்பாட் பகுதி எது.?

டெல்டா (இன்றும் நாளையும் மிக கனமழை) - டெல்டா சுற்றுவட்டார மாவட்டங்கள் - நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, அனைத்து இடங்களிலும் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும். இந்த காற்றழுத்த தாழ்வுபகுதிக்கான ஹாட்ஸ்பாட்டில் டெல்டா பெல்ட் உள்ளதாக தெரிவித்துள்ளார்
 

rain hot spot

இந்த இடங்களுக்கு போகாதீங்க

அடுத்தாக கொடைக்கானல் மற்றும் குன்னூர் பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு இடங்களில் மழை அதிக அளவில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த காற்றழுத்தம் இந்த இரண்டு இடங்கள் வழியாக கேரளாவின் அரபிக்கடலுக்கு செல்லும் என தெரிவித்துள்ளார். எனவே கொடைக்கானல், குன்னூர் மற்றும் டெல்டா பகுதிகள்  கனமழைக்கு ஹாட்ஸ்பாட்டில் உள்ளதாகவும் சென்னைக்கு எப்போதும் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். 
 

Latest Videos

click me!