200 பிரபல நிறுவனங்கள்.! 10ஆயிரம் பேருக்கு வேலை- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Published : Dec 11, 2024, 07:15 AM IST

வேலை இல்லாமல் பல லட்சம் இளைஞர்கள் அலைந்து வரும் நிலையில், ஒரே நாளில் 10ஆயிரம் பேருக்கு வேலை வழங்கிடும் வகையில் முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

PREV
14
200 பிரபல நிறுவனங்கள்.! 10ஆயிரம் பேருக்கு வேலை- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Job Alert

வேலை தேடும் இளைஞர்கள்

தமிழகத்தில் ஆண்டு தோறும் பல லட்சம் இளைஞர்கள் கல்வி படிப்பை முடிந்து வேலை தேடி வெளியிடங்களுக்கு செல்கின்றனர். அந்த வகையில் தமிழக அரசு மட்டுமில்லாமல் மத்திய அரசு பணியிடங்களில் இணையும் வகையில் பல்வேறு அறிவிப்பு வெளியாகி வருகிறது. மேலும் தமிழக அரசு சார்பாக தேர்வுக்கு இளைஞர்கள்ங தயாராகும் வகையில் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதன் படி பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனவே அரசு பணியிடங்களில் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும் நிலையில் தனியார் துறையில் பல லட்சம் வேலைகள் குவிந்து கிடக்கிறது.
 

24
JOB MADURAI

வேலைவாய்ப்பு முகாம்

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தனியார் நிறுவனத்தோடு இணைந்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில்  சென்னையில் வருகிற 14ஆம் தேதி 20ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதே போல   மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து 14.12.2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதுரை சமூகஅறிவியல் கல்லூரி, அழகர்கோவில் ரோடு, மதுரை-2 வளாகத்தில் நடைபெறவுள்ளதாகலஅறிவிக்கப்பட்டுள்ளது. 
 

34
JOB ALERT

சிறப்பு அம்சங்கள்

 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள்

10000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்

44
JOB FAIR

கல்வித்தகுதிகள்

8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல்,கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள்.

அனுமதி இலவசம்

மேலும் விவரங்களுக்கு

துணை இயக்குநர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோ.புதூர், மதுரை - 7

தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து @ www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
 

Read more Photos on
click me!

Recommended Stories