திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!

First Published | Dec 10, 2024, 8:52 PM IST

Tiruvannamalai Deepam Festival: கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக திருவண்ணாமலைக்கு விழுப்புரம் மற்றும் திருச்சியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. டிசம்பர் 13, 14, 15 தேதிகளில் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு மெமு ரயில்கள் இயக்கப்படும்.

Tiruvannamalai Deepam Festival

கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே எல்லாருக்கும் முதலில் ஞாபகம் வரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் தீபம் தான். அந்த அளவுக்கு சிறப்புமிக்க திருவிழாகும்.  ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். இந்த  ஆண்டுக்கான காத்திகை தீபத்திருவிழா டிசம்பர் 13ம் தேதி அதிகாலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் பரணி தீபமும்,  மாலையில் மலை உச்சியில் மகா தீபம் 6 மணிக்கும் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Special Bus

ஆகையால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. பக்தர்களின் வசதிக்காக 10,000 பேருந்துகளை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 2 ரயில்களும், திருச்சியில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எந்தெந்த தேதியில் எந்த நேரத்தில் இயக்கப்படுகிறது என்பதை பார்ப்போம். 


MEMU Trains

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: டிசம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் முன்பதிவு இல்லாத மெமு எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தில் இருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டு காலை 11.10 மணியளவில் திருவண்ணாமலை சென்றடையும். பின்னர் அந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும். 

Tirvannamalai special train

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: டிசம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் முன்பதிவு இல்லாத மெமு எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தில் இருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டு காலை 11.10 மணியளவில் திருவண்ணாமலை சென்றடையும். பின்னர் அந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும். 

Special Train

அதேபோல் மற்றொரு சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து 13ம் தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு மதியம் 1.25 மணிக்கு வந்தடையும். பின்னர் அந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு மதியம் 2.50 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை சென்றடையும். 

Train News

மீண்டும் வந்த ரயில் வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.25க்கு திருவண்ணாமலைக்கு வந்தடையும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 14ம் தேதி அதிகாலை 7.20 மணிக்கு திருச்சியை சென்று சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!