இந்தியாவில் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். அதிலும் சாதாரண ரயில்களை விட அதிவேகமாக செல்லும் ரயில்களுக்கு எப்போதும் மசுவு அதிகம். அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிவேகமாக செல்லும் ரயில்களை பற்றி இந்த செய்தியில் விரிவாக காண்போம்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
தமிழ்நாட்டில் அதிவேகமாக செல்லும் ரயில்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள். தமிழ்நாட்டில் சென்னை-மைசூரு, சென்னை-திருநெல்வேலி, சென்னை-கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 110 முதல் 120 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
மற்ற ரயில்கள் சென்னைமதுரை இடையேயான 462 கிமீ தூரத்தை கடக்க 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும் நிலையில், வந்தே பாரத் 5 மணி நேரம் 38 நிமிடங்களில் கடந்து விடுகிறது. இதேபோல் கோவை, பெங்களூரு வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயில்களே வேகத்தில் முதன்மையாக உள்ளன.