விஜய்யின் அரசியல் சூறாவளி முதல் பெஞ்சல் புயல் வரை.! தமிழகம் 2024 பிளாஷ் பேக் இதோ..

Published : Dec 10, 2024, 02:49 PM ISTUpdated : Dec 11, 2024, 07:55 PM IST

2024ஆம் ஆண்டு தமிழகத்தில் பல அதிர்ச்சி மற்றும் ஆச்சரிய நிகழ்வுகள் அரங்கேறின. நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சோகம், செந்தில் பாலாஜியின் மீள் வருகை மற்றும் பெஞ்சல் புயல் என பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

PREV
16
விஜய்யின் அரசியல் சூறாவளி முதல் பெஞ்சல் புயல் வரை.! தமிழகம் 2024 பிளாஷ் பேக் இதோ..
Year End 2024

2024ஆம் ஆண்டு நினைவுகள்

ஒவ்வொரு ஆண்டும் புது, புது விஷயங்களை மட்டுமல்ல பல ஆச்சர்யங்களையும் விட்டு செல்கிறது கடந்து சென்ற நாட்கள். அந்த வகையில் இந்த 2024ஆம் ஆண்டில் பல்வேறு சுவாரஷ்ய சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக மக்களே இதுவரை தங்களது வாழ்நாளில் சந்திக்காத பல நிகழ்வுகள் கடந்து சென்றுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 12 மாதங்களில் நடைபெற்ற முக்கிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

26
Vijay TVK Politics

அரசியல் களம் இறங்கிய நடிகர் விஜய்

தமிழகத்தில் திமுக- அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளை மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில், இந்த கட்சிகளுக்கு போட்டியாக களத்தில் இறங்கியவர் தான் நடிகர் விஜய், தமிழக திரை துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், அரசியலில் கால் பதித்துள்ளார். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை பதிவு செய்து தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என கூறியவர் கட்சியின் கொடி மற்றும் கொள்கை பாடலை வெளியிட்டார். அடுத்தாக கடந்த நவம்பர் மாதம் விக்கிரவாண்டியில் மிகப் பெரிய அளவில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டை நடத்தி அசத்தினார்.  

36
2024 Election vote Counting

நாடாளுமன்ற தேர்தல்- 2024

நாடு முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்த தேர்தல் தான் நாடாளுமன்ற தேர்தல், இந்தியாவில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்த பாஜக ஹாட்ரிக் வெற்றி பெறுமா.? அல்லது காங்கிரஸ் தலைமையில் அமைந்த இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என ஆவலோடு காத்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், பாஜக தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது. இந்த தேர்தலில் பாஜகவிற்கு எதிரான வாக்குகளால் திமுக கூட்டணி தமிழகம் புதுவை உள்ளிட்ட 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது. அதே நேரத்தில் 400 தொகுதியை தனித்து வெற்றி என்ற முழக்கமிட்ட பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெறமுடியாத நிலை ஏற்பட்டது. நிதீஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு கட்சியின் உதவியோடு ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது பாஜக

46
Kallakurichi death

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்

தமிழகத்தை புரட்டிப்போட்ட சம்பவம் என்றால் விஷச்சாராய மரணம் தான், கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் துக்க வீட்டில் நண்பர்கள் உறவினர்களோடு சேர்ந்து கள்ளச்சாராயரம் அருந்தியுள்ளனர். அதில் கலக்கப்பட்ட அளவுக்கு அதிகமான வேதிப்பொருளால் கொத்து கொத்தாக உயிரிழப்பு ஏற்பட்டது. ஒரே வீட்டில் இரண்டு பேர், மூன்று பேர் என ஒரு தெருவே மயான பூமியாக மாறியது. ஒரு ஊரை சேர்ந்த 66 பேர் பலியான சம்பவத்தால் தமிழகம் மட்டுமின்றி நாடே அதிர்ச்சி அடைந்தது. இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி மேற்கொண்ட நிலையில் கடந்த நவம்பர் மாதம் இந்த விஷச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

56
Senthil balaji return

செந்தில் பாலாஜி ரிட்டர்ன்

தமிழக அரசியல் களத்தில் திமுகவிற்கு கொங்கு மண்டலத்தில் தூணாக இருப்பவர் தான் செந்தில் பாலாஜி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி திமுக தலைவரின் குட் புக்கில் இடம்பெற்றிருந்தார். தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருந்தவரை தான் சுமார் 12ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கு ஒன்றில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம்  இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஓராண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் தவித்தவருக்கு பல முறை ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் ஜாமின் கிடைத்து விடுவிக்கப்பட்டார். புழல் சிறையில் இருந்து வெளியே வந்த அடுத்த ஒரு சில நாட்களிலையே செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவை பொறுப்பு வழங்கி அழகு பார்த்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

66
Fengal Cyclone

பெஞ்சல் புயல்

வடகிழக்கு பருவமழை இந்தாண்டு எப்போதும் போல் இல்லாமல் சென்னைக்கு ரெட் அலர்ட் கொண்டே தொடங்கியது. ஆரம்பமே அதிரடியாக தொடங்கிய மழையால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. மதுரை, கோவை, திருச்சி என அனைத்து இடங்களிலும் கன மழை பெய்தது. வரலாற்றில் இல்லாத வகையில் ராமேஸ்வரத்தில் ஒரே நாளில் 53 செமீட்டர் மழை கொட்டோ கொட்டு என கொட்டியது. இதனால் மக்கள் திக்குமுக்காடி போன நிலையில் அடுத்ததாக சென்னையை குறிவைத்த பெஞ்சல் புயல் புதுச்சேரியை பதம்பார்த்து போகும் வழி முழுவதும் பேய் மழையை கொட்டி சென்றது. இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் வரலாற்றில் இதுவரை இல்லாத மழையாக பெய்தது. பல இடங்களில் வெள்ளத்தால் மூழ்கியது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories