Tiruvannamalai Temple
நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4ம் தேதி கொடியேற்றத்து தொடங்கியதை 10 நாட்கள் நடைபெற்று வரும் இத்திருவிழாவில் தினமும் காலை மற்றும் இரவு வேளையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
School Holidays
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகரம் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளான 2024-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
Government Employee
மேலே அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறை தினம் மாற்றியல் தாள்முறி கூடம் 1881 (மத்திய சட்டம் XXVI / 1881) ன் கீழ் வரும் பொது விடுமுறை இல்லை என்பதால், 2024ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13-ஆம் நாளன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவித்துள்ளார்
.