5 கிலோ தக்காளி 100 ரூபாய்.! ஒரே நாளில் பல்டி அடித்த விலை- குஷியில் இல்லத்தரசிகள்

Published : Dec 10, 2024, 11:19 AM IST

தமிழகத்தில் தொடர் மழையால் காய்கறி விலைகள் அதிகரித்த நிலையில், தற்போது மழை குறைந்ததால் தக்காளி, வெங்காயம் விலை குறைந்துள்ளது. சென்னையில் தக்காளி கிலோ ரூ.20-30க்கும், வெங்காயம் ரூ.40-50க்கும் விற்பனையாகிறது.

PREV
15
5 கிலோ தக்காளி 100 ரூபாய்.! ஒரே நாளில் பல்டி அடித்த விலை- குஷியில் இல்லத்தரசிகள்
tomato onion

போட்டி போட்டு உயர்ந்த தக்காளி,வெங்காய விலை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக காய்கறிகளின் விளைச்சல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலையானது கிடு கிடுவென அதிகரித்தது. அந்த வகையில் சமையலுக்கு முக்கிய தேவையானது வெங்காயம் மற்றும் தக்காளியாகும், ஆனால் இதன் விலை மட்டும் போட்டி போட்டு உயர்ந்தது. அதன் படி ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டால் தக்காளி விலை ஒரு கிலோ 80 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது.

25
TOMATO PRICE

தக்காளி விலை உயர்வு- இல்லத்தரசிகள் கவலை

இதனால் தக்காளி மற்றும் வெங்காயத்தை கிலோ கணக்கில் வாங்கி சென்ற மக்கள் தற்போது குறைவான அளவே வாங்கும் நிலை உருவானது. குறைவான அளவே தக்காளியை மற்றும் வெங்காயத்தை பயன்படுத்தி சமையல் செய்யும் நிலையும் ஏற்பட்டது. தக்காளி சட்னி போன்ற உணவுகளுக்கு வீடு மற்றும் ஓட்டல்களில் தயாரிப்பதும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பாதிப்பு இல்லாத காரணத்தால் தக்காளி விலை மீண்டும் குறைந்துள்ளது.

35
tomato onion price

பல்டி அடித்த தக்காளி விலை

அதன் படி நேற்று முன் தினம் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ தக்காளி 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் லாரிகளில் 5 கிலோ 100 ரூபாய் என கூவி கூவி  தரமான தக்காளி விற்பனை நடைபெறுகிறது. 

இதே போல உச்சத்தில் இருந்த வெங்காயத்தின் விலையும் குறைய தொடங்கியுள்ளது. வட மாநிலங்களில் வெங்காய விளைச்சல் அதிகரித்ததால் சென்னைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் 40 முதல் 50 ரூபாய்க்கு விற்றக்கப்படுகிறது.

45
vegetables price

கோயம்பேட்டில் காய்கறி விலை

காய்கறிகளின் விலையானது சற்று குறைந்துள்ளது. அதன் படி,  பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 60 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 

55
Vegetables Price Today

குறைந்தது காய்கறி விலை

சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 150 முதல் 200 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,  முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது

click me!

Recommended Stories