திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு எங்கிருந்து எத்தனை பேருந்து.? எப்போது இயக்கம்- வெளியான அறிவிப்பு

Published : Dec 10, 2024, 08:52 AM IST

Tiruvannamalai deepam : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. மகாதேரோட்டம் இன்று நடைபெறவுள்ளது. பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஏற்றப்படும் நாட்களில் கோயிலுக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

PREV
15
திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு எங்கிருந்து எத்தனை பேருந்து.? எப்போது இயக்கம்- வெளியான அறிவிப்பு
tiruvannamalai Temple

திருவண்ணாமலை கோயில் தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மிக முக்கிய திருவிழாவான உலகப் புகழ் பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை கோயிலின் முக்கிய உற்சவங்களில் ஒன்றான மகாதேரோட்டம் இன்று நடைபெறவுள்ளது.

மேலும் வருகிற  13-ம் தேதி அண்ணமலையார் கோயில் கருவறையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்றைய தினம் மாலை  2ஆயிரத்து 668 அடி உயர மலையின் மீது மகாதீபமும் ஏற்றப்படவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பரணி தீபத்தை காண லட்சக்கணக்கான மக்கள் கூடவுள்ளனர்.
 

25
Tiruvannamalai deepam

தீபத்தை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி

இந்தநிலையில்  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் உள்ளே 7,500 பேருக்கும், மாலையில் ஏற்றப்படும் மகாதீபத்தை காண 11,500 பேருக்கும் அனுமதி வழங்கப்பட உள்ளது. இதனிடையே தற்போது கன மழையின் காரணமாக ஏற்பட்ட மண் சரிவால் பெரிய அளவில் திருவண்ணாமலையில் உள்ள மலையில் பாதிப்பு ஏற்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு அதிகளவு மக்களை மலையில் ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில் திருவண்ணாமலைக்கு செல்ல பக்தர்கள் ஆர்வமுடன் உள்ள நிலையில் சிறப்பு பேருந்து தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

35
tiruvannamalai deepam

சிறப்பு பேருந்து இயக்கம்

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்  தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாள் (13/12/2024) மற்றும் பௌர்ணமி (14/12/2024)-யை முன்னிட்டு 12/12/2024 முதல் 15/12/2024 வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்தும் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்  சேலம், வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, கும்பகோணம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற இடங்களிலிருந்து) திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அந்த அறிவிப்பில் கூறப்படுள்ளது. 
 

45
tiruvannamalai temple

முன் பதிவு செய்ய அறிவிப்பு

தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in, மற்றும் tnstc official app, ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

55
tiruvannamalai girivalam

10ஆயிரம் சிறப்பு பேருந்து

அந்த வகையில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகிற 12-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 1982 பேருந்துகளும், மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 8,127 பேரிடம் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்தமாக 10ஆயிரத்து 109 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories