திருவண்ணாமலை தீப திருவிழா.! மலை மீது யாருக்கெல்லாம் அனுமதி.! ஆய்வாளர்கள் கூறியது என்ன.?

Published : Dec 10, 2024, 11:51 AM IST

Tiruvannamalai Deepam Festival : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. சமீபத்திய நிலச்சரிவால் மலை மீது மக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிபுணர் குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

PREV
14
திருவண்ணாமலை தீப திருவிழா.! மலை மீது யாருக்கெல்லாம் அனுமதி.! ஆய்வாளர்கள் கூறியது என்ன.?
tiruvannamalai

திருவண்ணாமலை தீப திருவிழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்  உலகப் புகழ் பெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. வருகிற  13-ம் தேதி அண்ணமலையார் கோயில் கருவறையில் அதிகாலையில் பரணி தீபமும், மாலையில்  2ஆயிரத்து 668 அடி உயர மலையின் மீது மகாதீபமும் ஏற்றப்படவுள்ளது. இந்த பரணி தீபத்தை காண லட்சக்கணக்கான மக்கள் கூடவுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையின் காரணமாக திருவண்ணாமலை உள்ள தீபம் ஏற்றப்படும் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகளின் மீது பெரிய அளவிலான பாறைகள் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

24
sekar babu

ஆய்வாளர்கள் மலை மீது ஆய்வு

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போதும் மலை மீதான பாறைகள் சரியும் நிலையில் இருப்பதாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆய்வாளர்கள் திருவண்ணாமலை மலை மீது ஆய்வு நடத்தி, மலை பாதுகாப்பாக உள்ளதா.? மீண்டும் மழை வந்தால் சரியுமா.? மண் உறுதித்தனை எப்படி உள்ளது என தமிழக அரசிடம் அறிக்கை அளித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்,

34
Tiruvannamalai Deepam Festival

திருவண்ணாமலை தீபம்- 40 லட்சம் பேர் வருவார்கள்

  இந்த ஆண்டு திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு சுமார் 40 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சமீபத்தில் நிகழ்ந்த நிலச்சரிவின் பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், தீப திருவிழாவின் போது மலை மீது மக்கள் அனுமதிப்பது குறித்து geology நிபுணர் சரவண பெருமாள்  ராஜா தலைமையில் 8 பேர் கொண்ட நிபுணர்கள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார்கள். 

44
tiruvannamalai temple

மலை மீது யாருகெல்லாம் அனுமதி.?

அந்த அறிக்கையின் படி தீப திருவிழாவுக்கு பயன்படுத்தப்படும்  350 கிலோ கொப்பரை, 450 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்ல எவ்வளவு மனித சக்தி தேவைப்படுமோ அவ்வளவு மனித சக்தி மட்டுமே மலை மீது அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தார். சான்றோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் இந்த திருவிழா தடைபட கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி , திருவண்ணாமலை தீப திருவிழா வழக்கம் போல இந்த  ஆண்டும் மிக சிறப்பாக நடத்தப்படும் என உறுதியளித்தார்.
 

Read more Photos on
click me!

Recommended Stories