ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டாம்.! 60 லட்சம் ரூபாய் வரை காப்பீடு- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு

Published : Dec 11, 2024, 07:52 AM ISTUpdated : Dec 11, 2024, 07:53 AM IST

தமிழக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படு்த்தி வருகிறது. அந்த வகையில் கனரா வங்கி, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகளில் சம்பளக் கணக்கு வைத்திருப்போருக்கு இலவசமாக 60 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படவுள்ளது.

PREV
14
ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டாம்.! 60 லட்சம் ரூபாய் வரை காப்பீடு- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
tamilnadu government

அரசு ஊழியர்களுக்கு காப்பீடு

தமிழக அரசு அரசு ஊழியர்களுக்காக பல்வேறு காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாநகர போக்குவரத்து இலவசமாகவே காப்பீட்டு திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் மாநகரப் போக்குவரத்துக் கழக பணியாளர்களின் நலனை கருதி சேமிப்பு சம்பள கணக்கு வைத்திருக்கும் வங்கியின் மூலம் எந்த ஒரு கூடுதல் தொகையும் செலுத்தாமல், காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்திட ஆலோசணை மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக கனரா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகளுடன் காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்தப்பட உள்ளது 

24
TAMILNADU BUS

மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு இலவச காப்பீடு

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நலனை கருதி சேமிப்பு சம்பள கணக்கு வைத்திருக்கும் வங்கியின் மூலம் காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்த அனைத்து வங்கிகளுடன் கலந்து ஆலோசணை மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக கனரா வங்கி. இந்தியன் வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகளில் சம்பள கணக்கு வைத்திருக்கும் பணியாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டங்களை வழங்க முன் வந்துள்ளது. இந்த சலுகை பெற எந்த ஒரு கூடுதல் தொகையும் செலுத்த வேண்டியதில்லை என தெரிவித்துள்ளார். 

34
Transport Workers Insurance Scheme

54 லட்சம் ரூபாய் வரை காப்பீடு

கனரா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் போக்குவரத்து கழக ஊழியர்களில் 50ஆயிரம் அளவிற்கு ஊதியம் பெருபவர்களுக்கு கால காப்பீட்டுத் தொகையை 3 லட்சம் ரூபாய் எனவும் தனிப்பட்ட விபத்து காப்பீட்டுத்தொகை 16 லட்சம் என தெரிவிக்கப்பட்டது. இதே போல 54 லட்சம் ரூபாய் வரை தனிப்பட்ட விபத்து காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

44
accident compensation

காப்பீட்டு திட்டம்

அடுத்ததாக இந்தியன் வங்கி கணக்கில் இருந்து  50ஆயிரம் ரூபாய் வரை  சம்பளம் பெரும் ஊழியர்களுக்கு 50 லட்சம் வரை தனிப்பட்ட விபத்து காப்பீட்டு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல பேங்க் ஆப் பரோடா வங்கி கணக்கில் இருந்து ஊதியம் பெரும் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 30 லட்சம், 40 லட்சம் மற்றும் 60 என்ற அடிப்படையில் தனிப்பட்ட விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் பணியாளர்களின் சம்பள கணக்கு பராமரிக்கும் இதர வங்கிகளுடனும் காப்பீட்டுத் திட்டங்களை வழங்கிட பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories