திமுக 75 அறிவுத் திருவிழாவில் பேசிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் எமர்ஜென்சி காலத்தில் மத்திய அரசுக்கு பயந்து அதிமுக என்ற பெயரை அஇஅதிமுக என மாற்றிவிட்டதாக தெரிவித்தார்.
சென்னையில் தி.மு.க. 75 அறிவுத் திருவிழாவின் ஒரு பகுதியாக காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு நூல் வெளியீடு, கருத்தரங்க நிறைவு விழாவில் இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “எமர்ஜென்சி காலத்தில் மாநிலக் கட்சிகளை எல்லாம் ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். உடனே, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்தார்கள் தெரியுமா? கட்சியின் பெயரை மாற்றிக்கொண்டார்கள். ஏதோ உத்தர பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் கிளைகள் இருக்கிறமாதிரி, கட்சியின் பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று கட்சியின் பெயரை மாற்றிவிட்டார்கள். இதுதான் தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் இருக்கிற வித்தியாசம்.
25
என்றைக்கும் திராவிட முன்னேற்ற கழகம் தான்
ஆனால், நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தெளிவாக சொன்னார்கள். வாழ்ந்தாலும் கழகத்தோடு வாழ்வோம், வீழ்ந்தாலும் கழகத்தோடு வீழ்வோம்’ என்று சொல்லி, எங்கள் இயக்கத்தின் பெயர் என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்று என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்’’ என்று நின்றவர் நம் கலைஞர் அவர்கள். அதை மாற்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னார். கலைஞர் காட்டிய அந்த உறுதியோடுதான் இன்றைக்கு நம் தலைவர் நம் இயக்கத்தை வழிநடத்திக்கொண்டு இருக்கிறார். நம்மை எல்லாம் கொள்கைதான் வழி நடத்துகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமியை பயம்தான் வழி நடத்துகிறது.
35
அடிமைத் திருவிழா
இப்போது நாம் தி.மு.க-வின் 75-வது ஆண்டைக் கொண்டாடுகிறோம். இந்த நிகழ்ச்சிக்கு அறிவுத் திருவிழா' என்று பெயர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் அறிவுத் திருவிழா’வெல்லாம் நடத்த முடியாது. வேண்டுமென்றால் அடிமைத் திருவிழா’ என்று ஒரு நிகழ்ச்சி நடத்தலாம். அந்த அளவுக்குக் கடைந்தெடுத்த அடிமையாக இருக்கிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான்.
அ.தி.மு.க-வின் ஓனர் பாசிச பா.ஜ.க-வால் நேரடியாக தமிழ்நாட்டுக்குள் கால் எடுத்து வைக்க முடியவில்லை. அதனால்தான் வேறு வேஷத்தைப் போட்டுக்கொண்டு வருகிறார்கள். அ.தி.மு.க என்கிற போர்வையை போர்த்திக்கொண்டு வருகிறார்கள். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைப் பார்க்கும்போது இரண்டு விஷயம்தான் எனக்கு ஞாபகம் வரும். ஒன்று கால், இன்னொன்று கார். ஒரு கட்சியின் தலைவர் இன்னொரு கட்சி தலைவரை பார்ப்பதற்கு யாராவது 4 கார் மாறி செல்வார்களா?
அதேபோல் கால், ஜெயலலிதா அம்மா இருந்தவரை அவரின் கால், அந்த அம்மா இறந்த பிறகு அந்த அம்மாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா அம்மாவின் கால், அந்த அம்மையார் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்றவுடன், டி.டி.வி.தினகரன் கால், அதற்கு பிறகு டெல்லிக்குச் சென்று மோடி, அமித்ஷாவின் கால்கள். இப்போது ஜெ.தீபா அவர்களின் கால். இப்போது அந்த கால்கள் பற்றவில்லை என்று, புதிய கால்களைத் தேடிக்கொண்டு இருக்கிறார். அ.தி.மு.க தொண்டர்களைப் பார்க்கும்போது நமக்கெல்லாம் பாவமாகத்தான் இருக்கிறது.
55
எடப்பாடி பழனிசாமியின் நிலை..?
எடப்பாடி பழனிசாமி அவர்கள் அ.தி.மு.க தொண்டர்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரமாண்டமான கட்சி, நம் கூட்டணிக்கு வரப்போகிறது என்று சொன்னார். அ.தி.மு.க. பிரச்சார கூட்டத்தில், இன்னொரு கட்சியின் கொடியை அவர்களே பிடித்து ஆட்டிக்கொண்டு, பார்த்தீர்களா கொடி பறக்குது. பிள்ளையார் சுழி போட்டாச்சு’’ என்று குரளி வித்தை காட்டினார். தேர்வுக்கு படிக்காமல் வந்த மாணவன், விடைத்தாளில் பிள்ளையார் சுழி மட்டும் போட்டு உட்காந்து இருக்கிறமாதிரி ஆச்சு. இப்போது எடப்பாடி பழனிசாமியின் நிலைமை. படிக்காதவர்கள் ஒரேயொரு பிள்ளையார் சுழிதான் போடுவார்கள். ஒன்றும் எழுதாமல் எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் என்று விட்டுவிடுவார்கள். அந்த நிலைமையில்தான் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இருக்கிறார்கள்.