தமிழக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர் சகோதரி கிளாரா. திருவான்மியூரில் பணியின் போது, கீழே கிடந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை கண்டெடுத்திருக்கிறார்.
23
நேரில் அழைத்து பாராட்டிய உதயநிதி
உடனே அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவரிடம் சேர்க்கச் சொல்லி, நேர்மையால் உயர்ந்து நிற்கிறார் அவர்! இத்தூய உள்ளத்துக்குச் சொந்தக்காரரான சகோதரி கிளாரா மற்றும் அவரது குடும்பத்தாரை நேரில் சந்தித்துப் பாராட்டினோம்.
33
துணைமுதல்வர் நிதியுதவி
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அவருக்குப் புத்தாடையும், திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் நிதியும் வழங்கி வாழ்த்தினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.