வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உட்பட 14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் (Cyclone Ditwah) தற்போது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இது இலங்கையில் ஏற்படுத்திய பேரழிவுக்குப் பிறகு இந்தியாவை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) விடுத்துள்ள எச்சரிக்கைகளின்படி, இது கனமழை, வலுவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
24
சென்னைக்கு பாதிப்பு..?
புயல் தற்போது சென்னைக்கு தெற்கு-தென்மேற்கு திசையில் சுமார் 400 கி.மீ தொலைவில் (இலங்கை கடற்பரப்புக்கு அருகில்) மையம் கொண்டுள்ளது. வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் புயல் நகர்கிறது. சமீபத்தில் வலுவடைந்து, மணிக்கு 40-60 கி.மீ வேகம் காற்றுடன் நகர்கிறது. புயல் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளான நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுச்சேரி உட்பட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழையை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு 80-100 கி.மீ தொலைவில் பாதிப்பு இருக்கலாம்.
34
60 கிமீ வேகத்தில் காற்று
இன்று முதல் டிசம்பர் 2 வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டெல்டா மற்றும் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40-60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புயல் காரணமாக திருவள்ளூர் மற்றம் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் கனமழையும், ஒருசில பகுதிகளில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.