உதயநிதி தொகுதிலயே விஜய் தான் லீடிங்.. சர்வே முடிவுகளால் கதி கலங்கும் அறிவாலயம்

Published : Nov 29, 2025, 05:58 PM IST

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் அக்கட்சி சார்வில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் வெளியாகி ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
15
தவெகவின் வெற்றி வாய்ப்பு

அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான செங்கோட்டையன் அண்மையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது தமிழக அரசியலில் புயலை கிழப்பியது. தவெகவுக்கு தமிழகம் முழுவதும் 25 சதவீத வாக்குகள் இருப்பதாக அக்கட்சியின் தேர்தல் பிரசார வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளன.

25
70 தொகுதிகளில் 40 சதவீத வாக்கு

தமிழகம் முழுவதும் சோசியல் என்ஜினியரிங் முறையில் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில், “தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 70 தொகுதிகளில் தவெகவுக்கு 40 சதவீத வாக்குகள் இருப்பதாகவும், சுமார் 140 தொகுதிகளில் 25 சதவீத வாக்குகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் தென்மாவட்டங்களில் மட்டும் கட்சியின் வாக்கு சதவீதம் சற்று குறைவாக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

35
தென்மாவட்டங்களுக்கு தனி ஸ்கெட்ச்

ஆனால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும், அந்த கட்சியை தவெகவுடன் கூட்டணி சேர்த்து தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது. அதே போன்று அமமுகவும் தவெகவுடன் கூட்டணி சேரலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த கட்சிகள் கூட்டணிக்கு வரும் பட்சத்தில் தென்தமிழகத்திலும் தமிழக வெற்றி கழகம் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிடும்.

45
முதல் தலைமுறை வாக்காளர்களை கொத்தாக அள்ளிய தவெக

பாலின வாரியாக எடுக்கப்பட்ட சர்வேயில் பெண்களின் வாக்குகளில் 58 சதவீத வாக்குகள் தவெகவுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தலைமுறை, இளம் வாக்காளர்கள் என்று சொல்லப்பட்ட Gen Z வாக்காளர்களில் 80 சதவீத வாக்குகள் விஜய்க்கு தான் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால் தவெக நிர்வாகிகள் குஷியில் உள்ளனர்.

55
திமுகவுக்கு ஷாக் கொடுத்த தவெக

இந்த சர்வேயில் சோழிங்கநல்லூர் தொகுதியில் 51 சதவீத வாக்குகள் பெற்று தவெக முதல் கட்சியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதே போன்று திருவள்ளூரிலும் தவெக 50 சதவீத வாக்குகளை பெறுகிறது. துணைமுதல்வரின் தொகுதியான சேப்பாக்கம் தொகுதியில் தவெக 48 சதவீத வாக்குகளை பெறும் என்று வெளியாகியுள்ள சர்வேயால் திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories