நான் வயிறு எரிந்து சொல்கிறேன்.. அன்புமணிக்கு மேடையிலேயே சாபம் விட்ட ராமதாஸ்

Published : Nov 29, 2025, 03:38 PM IST

பாமக தலைவர் அன்புமணி தான் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதிய நிலையில் “வயிறு எரிந்து சொல்கிறேன். உன் அரசியல் பயணம் முடிந்துவிட்டது” என பொதுக்கூட்ட மேடையிலேயே ராமதாஸ் சாபம் விட்டதால் பரபரப்பு.

PREV
14
தந்தை பாமக Vs மகன் பாமக

பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த சில மாதங்களாகவே தந்தை, மகன் இடையேயான அதிகார மோதல் காரணமாக அக்கட்சி பிளவு பட்டு இருக்கிறது. இதனிடையே கட்சியின் தலைவர் நான் தான் என அதன் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி என இருவரும் மாறி மாறி உரிமை கொண்டாடி வந்தனர். மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் இரு தரப்பு சார்பில் முறையிடப்பட்டது.

24
அன்புமணி தான் தலைவர்..!

இதனிடையே அன்புமணியின் தலைவர் பொறுப்பு 2026 ஜூன் மாதம் வரை பொதுக்குழுவால் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் நிறுவனர் ராமதாஸ்க்கு அன்புமணி தான் பாமக தலைவர் என்று குறிப்பிட்டு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தால் அன்புமணி தரப்பு மிகுந்த கொண்டாட்டமடைந்துள்ளனர்.

34
தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கிய அன்புமணி

இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் இன்று கடலூர் மாவட்டம் வடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “தேர்தல் ஆணையத்தை பணம் கொடுத்து அன்புமணி வாங்கிவிட்டார். என்னுடைய உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. நான் உருவாக்கிய கட்சியை அன்புமணி அபகரிக்க முயற்சிக்கிறார்.

உடன் இருந்தவர்களை விலைக்கு வாங்கியது போல தேர்தல் ஆணையத்தையே இப்போது அன்புமணி விலைக்கு வாங்கிவிட்டார். தேர்தல் ஆணையத்திடம் உண்மையை சொன்னால் ஏற்க மறுக்கிறது. ஏனென்றால் தேர்தல் ஆணையம் வரை விலை போய்விட்டது. தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கினாலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதி வெல்லும்.

44
மேடையிலேயே சாபம் விட்ட ராமதாஸ்

உன்னுடைய பதவி காலம் முடிந்துவிட்டது. என் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது. நான் செய்த தவறுகள், உன்னை படிக்க வைத்தது, மருத்துவராக்கியது. அதனால் இப்போது நீ என்னோடு மோத நினைக்கிறாய். அது உன்னால் முடியாது. மக்கள் என் பக்கம் உள்ளனர். உன் பாச்சா பலிக்காது. தேர்தல் ஆணையத்தில் வேண்டுமென்றால் வெற்றி பெறலாம் இங்கு நீதி, நியாயம் தான் வெற்றி பெறும்.

பொதுக்குழு கூட்டத்தில் நான் வயிறு எரிந்து சொல்கிறேன். உன் அரசியல் பயணம் முடிந்துவிட்டது என மேடையிலேயே அன்புமணிக்கு ராமதாஸ் சாபம் விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Read more Photos on
click me!

Recommended Stories