திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் கன்னியாகுமரி கோட்டாறு பேராலய திருவிழாவை முன்னிட்டு, டிசம்பர் 3ம் தேதி அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மாற்று வேலை நாட்களும் அறிவிப்பு.
விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். பொது விடுமுறையை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்களில் மற்றும் தியாகிகளின் நினைவு தினம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கம்.
26
கார்த்தியை தீபத் திருவிழா
அதன்படி உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்தியை தீபத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. விழாவின் 7வது நாளான நாளை தோரோட்டம் நடைபெறுகிறது. குறிப்பாக விழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 03-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலையின் மீது மகாதீபமும் ஏற்றப்படவுள்ளது.
36
டிசம்பர் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்த கார்த்திகை தீப திருவிழாவுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சுமார் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரம் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், கார்த்திகை மாதம் மகா தீப திருநாள், டிசம்பர் 3ம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் (தேர்வுக்கு இடையூறு இல்லாமல்) அரசு சார்புடைய நிறுவனங்களும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
56
டிசம்பர் 13-ம் தேதி சனிக்கிழமை வேலை நாள்
இந்த டிசம்பர் மாதம் 03ம் உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் மாதம் 13-ம் நாள் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட உள்ளூர் தினம் மாற்றியல் தாள்முறி சட்டம் 1881 கீழ் வரும் பொது விடுமுறை இல்லை என்பதால், டிசம்பர் 3ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
66
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ம் தேதி கோட்டாறு பேராலய திருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஈடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 6ம் தேதி மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.