கடலூர் தனியார் பள்ளி வேன் இன்று காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) ஓட்டிச் சென்றார். இந்நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது. இதில், பள்ளி வேன் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது.