அந்த வகையில் சென்னையிலிருந்து 3 நாட்கள் பயணமாக நவக்கிரக கோயில்களுக்கு அழைத்து செல்லப்படுகிறது.இதில் திங்களூர் (சந்திரன்), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோயில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழப்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி), ஆலங்குடி (குரு) ஆகிய கோயில்களை கொண்ட சுற்றுலாவாக அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்தாக ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலை மையமாகக் கொண்ட மூன்று நாட்கள் பயண சுற்றுலாவும் செயல்படுத்தப்படுகிறது. ஆடி அமாவாசை சமயத்தில் பக்தர்களுக்காக இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. முருகனின் ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றை தரிசிக்கும் பயண சுற்றுலாவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது