தமிழகம் தடைபடும் சிலிண்டர் விநியோகம்? கலக்கத்தில் இல்லத்தரசிகள்!!

First Published | Oct 10, 2024, 7:22 AM IST

குறைந்தபட்ச ஊதியம், அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிலிண்டர் டெலிவரிமேன்கள் போராட்டம் அறிவித்துள்ளதால் சமையல் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Cooking Gas

தமிழகம் முழுவதும் பல்வேறு சேவைத் துறைகளிலும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இயங்கி வருகின்றன. தொழிலாளர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ, அல்லது நிறுவனம் தரப்பில் ஏதேனும் உதவி தேவைப்பட்டாலோ ஊழியர்கள் சார்பாக குரல் எழுப்புவதற்கு தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. போக்குவரத்து தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கூலித் தொழிலலாளர்கள் தொடங்கி பல்வேறு துறைகளிலும் தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

Cooking Gas

இதனிடையே தமிழகம் முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பாரத் கேஸ், இன்டேன், எச்.பி. உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. சமையல் கேஸ் சிலிண்டர்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெலிவரி மேன்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

Latest Videos


Cooking Gas

மேலும் பிரதமர் மோடி 2014ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதும் கிராமங்கள் தோறும் இல்லத்தரசிகளுக்கு இலவசமாக சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் கேஸ் அடுப்பை பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 

Cooking Gas

இந்நிலையில், தமிழகம் முழுவதும் சமையல் சிலிண்டர் விநியோகம் செய்யும் டெலிவரிமேன் தொழிற்சங்கம் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி டெலிவரி மேன், மெக்கானிக், ஓட்டுநர்கள், குடோன் கீப்பர், லோடு மேன்கள், பணியாளர் உள்ளிட்டவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

Cooking Gas

தொழிலாளர் நல சட்டத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது, அகவிலைப்படி உயர்வு, ரூ.12 ஆயிரத்தை தீபாவளி போனசாக வழங்குவது, அரசு விடுமுறை நாட்களில் ஊதியத்துடன் விடுப்பு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 26ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் தங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் சமையல் சிலிண்டர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

click me!