Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை குறித்து சூப்பர் அறிவிப்பு வெளியானது!

First Published | Oct 9, 2024, 11:19 PM IST

Magalir Urimai Thogai Scheme: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைப்பது குறித்து சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Magalir Urimai Thogai

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் தகுதியானவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

CM Stalin

மீதமுள்ள 55 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்த திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

Latest Videos


Kalaignar Urimai Thogai Thittam

இதனையடுத்து மேல் முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் கூடுதலாக விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு தற்போது ஒரு கோடியே 16 லட்சம் பேரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 15ம் தேதி 1000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மேலும் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது.

tamilnadu family women head cash

இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்ட நிலையில் அந்த மக்களும் மகளிர் உரிமை தொகை தொடர்பாக எப்போது அறிவிப்பு வரும் என எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை மீண்டும் நடத்த வேண்டும் பொருளாதார தகுதியில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று பெண்கள்  கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Magalir Urimai Thogai Scheme

இந்நிலையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் அமைச்சர் மற்றும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைப்பது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Udhayanidhi Stalin

அதாவது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத மகளிர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். தங்களுடைய கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று விடுபட்ட தகுதிவாய்ந்த அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். ஊரக உள்ளட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள அதற்குள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம் குறித்த அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளது. 

click me!