இந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க மொத்தம் 90 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், 60 பேர் மட்டுமே பங்கேற்றனர். 30 பேர் கூட்டத்தில் பங்கேற்காமல் எஸ்கேப் ஆனார்கள்.
விஜய்க்கு வாய்ஸ் கொடுத்த எம்.பி.க்கள்
காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த், முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகிய முக்கியமானவர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தவெக தலைவர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் சென்சார் சர்டிபிகேட் வழங்காததால் முடங்கி கிடக்கிறது. ப
டத்தை முடக்கி வைத்து மத்திய பாஜக அரசு விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த் ஆகிய எம்.பி.க்கள் அழுத்தமாக குரல் கொடுத்தனர்.