Published : Jan 20, 2026, 07:13 PM ISTUpdated : Jan 20, 2026, 07:50 PM IST
DMK Mega Conference in Trichy: திருச்சியில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜனவரி 20) நடந்தது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் 'ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற தலைப்பில் திருச்சியில் மார்ச் 8ம் தேதி 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
24
வீடு, வீடாக பரப்புரை
திராவிட மாடல் அரசு பெண்களுக்குச் செய்துள்ள சாதனைத்திட்டங்களைப் பெண்களிடம் எடுத்துக்கூறி மகளிரின் முழுமையான ஆதரவு கழகத்திற்கு மட்டுமே என்ற நிலையை உறுதி செய்திட வேண்டும்.
பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரைக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 மகளிர் அந்தந்த தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட வீடுகளில் வீடு வீடாகப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரசின் மகளிர் நலத்திட்டங்களை எடுத்துக்கூறியும், சாதனைத் திட்டங்களின் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மக்களிடம் கழகத்திற்கான ஆதரவைத் திரட்டிட வேண்டும் எனவும், இந்தப் பரப்புரை மூலம் பெண்கள் வாக்கு சிந்தாமல் சிதறாமல் முழுமையாக கழத்திற்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
34
தெருமுனை கூட்டங்கள், மாநிலம் முழுவதும் பரப்புரை
பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 28 வரை தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 'தமிழ்நாடு தலைகுனியாது' பரப்புரையை மேற்கொள்ளும் வகையில்ம் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தலா இடங்களில் தெருமுனை கூட்டங்கள் அல்லது அரங்கக் கூட்டங்களாக பரப்புரை செய்வதுடன், தங்கள் சுற்றுப்பயணத்தின் போது மண்டலப் பொறுப்பாளருடன் இணைந்து ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் முக்கியப் பிரமுகர்கள், இளைஞர்கள்/ மாணவர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரை சந்தித்தும் கலந்துரையாடலாக பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் (BLC) மற்றும் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA) ஆகியோரைத் தேர்தல் பணிக்கு முழுமையாகத் தயார் செய்யும் வகையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடுகளை நான்கு மண்டலங்களில் நடத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி பிப்ரவரி-11 அன்று சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களுக்கான மாநாட்டை தாம்பரம் படப்பையிலும், பிப்ரவரி-14 அன்று வடக்கு மண்டலம் மாநாட்டை திருப்பத்தூரிலும், பிப்ரவரி-21 அன்று தெற்கு மண்டலம் மாநாட்டை மதுரையிலும், பிப்ரவரி-27 அன்று மேற்கு மண்டலத்திற்கான மாநாட்டை கோவையிலும் நடத்திட தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.