செயின் பறிப்பால் கழுத்தில் காயம்.! குற்றவாளியை உடனே கைது செய்யுங்க..! அமித்ஷாவிற்கு எம்பி சுதா பரபரப்பு கடிதம்

Published : Aug 04, 2025, 10:58 AM IST

டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதாவிடம் ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் செயின் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து எம்பி சுதா உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

PREV
14

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்பி சுதா டெல்லியில் இன்று காலை நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் இருந்த நான்கு சவரன் தங்கச் செயினை பறித்து சென்றார். இந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 எம்பியிடம் இருந்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியே பரபரபாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சுதா, இவர் மயிலாடுதுறை தொகுதியில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அப்பகுதி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொடுத்துள்ளார்.

24

பல முறை மக்களவையில் மயிலாடுதுறை மக்களுக்காக புதிய திட்டங்களுக்காகவும் பேசியுள்ளார். இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக எம்பிக்கள் டெல்லியில் குவிந்துள்ளனர். 

அந்த வகையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும் எம்பி சுதா காலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று காலை திமுக எம்பி சல்மாவுடன் நடைபயிற்சி சென்ற நிலையில் அப்பகுதியில் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த நபர் சுதாவின் கழுத்தில் உள்ள தங்க சங்கிலையை பறித்து கொண்டு பறந்துள்ளார்.

34

இதனால் அதிர்ச்சி அடைந்த சுதா கத்தியுள்ளார். ஆனால் கண் இமைக்கும் நேரத்திற்குள் மர்ம நபர் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். இதனையடுத்து சாணக்கியபுரி காவல்நிலையத்தில் சுதா புகார் அளித்துள்ளார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் எம்பியிடம் செயின் பறிக்கப்பட்ட இடம் அதிக பாதுகாப்பு மிகுந்த பகுதியாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் பல்வேறு நாட்டின் தூதரங்களும் உள்ளது. எனவே 24 மணி நேர பாதுகாப்பு உள்ள இடத்தில் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

44

இந்த பரபரபான சூழலில் செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக எம்பி சுதா உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மின்னஞ்சல் வாயிலாக கடிதம் எழுதியுள்ளார். இதில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற போது தன்னுடைய கழுத்திலும் லேசான காயம் ஏற்பட்டு இருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த குற்றவியல் தாக்குதலால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

உயர் பாதுகாப்பு மண்டலத்தில் ஏராளமான சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்வதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் எனது தங்கச் சங்கிலி மீட்கப்பட்டு, எனக்கு விரைவில் நீதி கிடைக்க உறுதியளிக்கவும் எனவும் அந்த கடிதத்தில் சுதா குறிப்பிட்டுள்ளார்

Read more Photos on
click me!

Recommended Stories