முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!

Published : Dec 31, 2025, 09:25 PM IST

பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறாக பேசிய யுடியூபர் முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பிரபு, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

PREV
14
காமராஜர் குறித்து முக்தார் சர்ச்சை பேச்சு

பிரபல யூடியூபர் முக்தார் "மை இந்தியா 24x7" என்ற சேனலில் பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். தமிழகத்தில் நல்லாட்சிக்கு அடையாளமாக திகழந்த பெருந்தலைவர் காமரஜர் குறித்து பேசியதற்காக முக்தாருக்கு காங்கிரஸ் கட்சி, நாடார் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

24
பொங்கியெழுந்த காங்கிரஸ்காரர்கள்

மேலும் முக்தாருக்கு எதிராக நடவடிக்கைகோரி தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் காங்கிரஸ் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் புகார் கொடுத்தனர். கடும் எதிர்ப்பு எழுந்ததால் காமராஜர் குறித்து பேசியதற்கு முக்தார் மன்னிப்பு கேட்டார். 

காமராஜர் குறித்து முக்கிய பிரமுகர்கள், செய்தி சேனல்கள் சொன்னதைத்தான் தான் பேசியதாகவும், அது தனது தனிப்பட்ட கருத்து இல்லை என்றும் தனது பேச்சால் குறிப்பட்ட சமுக மக்கள் புண்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார்.

34
தீவிரமாக களமிறங்கிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபு

இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் காமராஜரை இழிவுப்படுத்திய முக்தார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளார். 

முக்தார் மீது நடவடிக்கை கோரி பிரபு கடந்த 12ம் தேதி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் இந்த மனு மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

44
முக்தாருக்கு எதிராக போராட்டம்

இதைக்கண்டித்தும், முக்தார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேற்று முன்தினம் பிரபு தலைமையில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பாக உள்ள இந்திராகாந்தி சிலைக்கு முன் காமராஜர் படத்துடன் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக கூறி காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் மனு

இந்த நிலையில் தான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மற்றும் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் முக்தார் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை; அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பிரபு மனு அளித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories