பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள்? ரொக்கப்பணம் உண்டா? அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published : Dec 31, 2025, 08:36 PM IST

2026 பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ரூ.248 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இருக்கும்? என்பது குறித்து பார்க்கலாம். 

PREV
12
பொங்கல் பரிசு தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2026 பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ரூ.248 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு இப்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

 தமிழகத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் உள்பட சுமார் 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

22
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள்?

பொங்கல் பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ரொக்கப்பணம் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. 

திமுக அரசு கடந்த 2022, 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கிய நிலையில், கடந்த ஆண்டு ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை. ஆனால் விரைவில் தேர்தல் வருவதால் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் திமுக அரசு ரூ.5000 வழங்கும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories