அதாவது ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக சர்க்கரை மட்டும் வாங்கும் வெள்ளை நிற அட்டைதாரர்களுக்கு (White/Sugar Cards) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதில்லை. ரேஷனில் எந்தப் பொருளும் வாங்காமல் வெறும் அடையாள சான்றுக்காக மட்டும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு கிடைக்காது.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள்
அரசு விதிகளின்படி மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்களில் ஒரு பிரிவினர் ஆகியோருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதேபோல் ரேஷன் கார்டு வைத்திருந்து நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் முடக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் பொங்கல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை.