Published : May 02, 2025, 11:14 AM ISTUpdated : May 02, 2025, 01:00 PM IST
சிபிஎஸ்இ பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை ஃபெயில் செய்யும் புதிய நடைமுறைக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
5th and 8th grade students should not be failed out: மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகிறது. அவ்வப்போது புதிய மாற்றங்கள் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள், புதிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
24
CBSE new education policy
தேசிய கல்விக் கொள்கை
இந்நிலையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8ம் வகுப்பு வரை மாணவர்களை ஃபெயில் ஆக்ககூடாது என்ற நடைமுறை இருந்து வந்தது. இதனையடுத்து தேசிய கல்விக் கொள்கையில் இந்த விதிமுறைகள் திருத்தப்பட்டது. இந்த விதிமுறையின் அடிப்படையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில், தற்போது 5, 8ம் வகுப்புகளுக்கு மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர்களை ஃபெயில் ஆக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த மார்ச் 18ம் தேதி சிபிஎஸ்சி சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
34
CBSE School Student
பெற்றோரிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம்
மதிப்பெண்கள் குறைவாக பெற்றால் என்னுடைய பிள்ளையை பெயில் ஆக்க சம்மதிக்கிறேன் என பெற்றோரிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு வருகிறது. இந்த கல்வியாண்டே இந்த நடைமுறையை அமல்படுத்த இருந்த நிலையில் சில வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் ஏப்ரல் மாதம் முடிவதற்குள் திருத்தப்பட்டு, அவர்கள் அடுத்த வகுப்புகள் சென்றுவிட்டதால், அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சிபிஎஸ்இ-யில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற விதி ரத்து செய்யப்பட்டதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: 5, 8ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றால் பெயில் ஆக்கும் சிபிஎஸ்இ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கினால் இடைநிற்றல் அதிகரிக்கும். இதன் காரணமாகதான் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. 5,8ம் வகுப்பில் பெயில் எனக் கூறி கையெழுத்து கேட்டால் பெற்றோர் கேள்வி கேட்க வேண்டும். சிபிஎஸ்சியின் இந்த நடவடிக்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கடனை வாங்கி சிபிஎஸ்சி பள்ளியில் சேர்க்கும் பெற்றோர் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்? திமுகவினரின் பிள்ளைகளுக்காக பேசவில்லை. அனைத்து மாணவர்களுக்காகவும் பேசுகிறோம் என தெரிவித்துள்ளார்.