இரண்டு குழந்தைகளின் தந்தையுடன் 22 வயது மருத்துவ மாணவி.. கெஞ்சியும் கேட்காத வர்ஷினி.. தந்தை அதிர்ச்சி வாக்குமூலம்

Published : Feb 04, 2026, 03:37 PM IST

College Student Murder Case: சேலத்தில் ஹோமியோபதி மாணவி வர்ஷினி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது தந்தை வரதராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

PREV
15
மருத்துவ கல்லூரி மாணவி

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பாரதி நகரை சேர்ந்த வரதராஜன்(52). இவரின் மகள் வர்ஷினி (22). இவர் சேலத்தில் உள்ள தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி அருகேயுள்ள நல்லாம்பட்டி நாயக்கன்பட்டியில் லட்சுமணன் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தோழியுடன் அறை எடுத்து தங்கி படித்து வந்தார்.

25
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி வர்ஷினி தங்கி இருந்த அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக தோழிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த இரும்பாலை போலீசார் வர்ஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வர்ஷினியின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

35
செல்போன் சுவிட்ச்-ஆப்

கொலை நடைபெற்ற நாளன்று நெல்லையில் இருந்து வரதராஜன் சேலம் வந்து மகளை பார்த்து சென்றதும், பின்னர் அவருடைய செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தந்தையை விசாரிக்கும் பட்சத்தில் உண்மை நிலவரம் தெரியவரும் கூறிவந்தனர். இந்நிலையில் வரதராஜனை போலீசார் சேலத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

45
காதலை கைவிடுமாறு கெஞ்சிய தந்தை

அதில், எனது மகள் வர்ஷினி நெல்லையில் 12ம் வகுப்பு படிக்கும்போது அந்த பள்ளிக்கு பயிற்சி அளிக்க வந்த டேக்வாண்டோ பயிற்சியாளருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. 22 வயதான வர்ஷினி நெல்லை சேர்ந்த 40 வயதான 2 குழந்தைகளின் தந்தையை காதலித்து வந்ததால் மகளை கண்டித்தேன். காதலை கைவிடுமாறு பலமுறை கெஞ்சி பார்த்தேன்.

55
தந்தை பரபரப்பு வாக்குமூலம்

ஆனால் டேக்வாண்டோ பயிற்சியாளருடனான காதலை கைவிட மறுத்து விட்டாள். கல்லூரி விடுமுறையில் ஊருக்கு வந்த மகள் வீட்டிற்கு வராமல், டேக்வாண்டோ பயிற்சியாளரை பார்த்துவிட்டு சேலம் வந்தது தெரிந்தது. இறுதியாக மகளை சந்தித்து காதலை கைவிடுமாறு கேட்கலாம் என்று சம்பவம் நடந்த அன்று சேலம் வந்து மகள் கையை பிடித்து காதலை கைவிடுமாறு கெஞ்சினேன். அவள் மறுத்து விட்டாள். ஆத்திரத்தில் அடித்தபோது கீழே விழுந்த வர்ஷினி முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்தேன். பின்னர் சென்னை சென்று வடபழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்தேன். என்னை போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்ததால் சரணடையலாம் என்று நினைத்து சேலம் வந்தேன். ஆனால் போலீசார் கைது செய்துவிட்டனர் என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories