ஊராட்சி செயலாளர்களை ஏமாற்றிய தமிழக அரசு..! தவிடுபொடியாகும் திமுகவின் தேர்தல் வியூகங்கள்..!

Published : Feb 04, 2026, 03:17 PM IST

கிராம மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஊராட்சி செயலாளர்கள், திமுக ஆட்சி மீதான இதே அதிருப்தியை வெளிப்படுத்தினால் அது சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அரசுக்கு எதிராக பிரதிபலிக்கும்.

PREV
14
ஊராட்சி செயலாளர்களின் தொடர் போராட்டம்

திமுக ஆட்சி அமைத்து ஐந்து வருடங்கள் நிறைவடையப்போகும் நிலையிலும் கடந்த தேர்தல் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாகக்கூறி பல்வேறு அமைப்பினரும் குமுறி போராட்டங்களில் குதித்து வருகின்றனர்.

திமுக அரசை எதிர்த்து தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு தரப்பினரிடமிருந்து போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, ஊதியம்,பணி நிரந்தரம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை மையமாகக் கொண்டு நடக்கும் போராட்டங்கள். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தப் போராட்டங்கள் அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம், இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் என தொடரும் போராட்டங்களுக்கு மத்தியில் ஊராட்சி செயலாளர்களும் தொடர்ந்து, போராட்டங்களில் ஈடுபடுவதும், அவர்களை கைது செய்வதுமாக போக்குக்காட்டி வருகிறது திமுக அரசு.

24
அதிர்ச்சியில் ஊராட்சி செயலர்கள்

இன்று சென்னை, சைதாப்பேட்டையில் அடுத்த கட்டப்போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளர்கள் அமைப்பினர் கூறுகையில், ‘‘2018 முதல் முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் பகுதி நேர பணியாளர்களோடு இணைத்து ஓய்வூதியம் அறிவித்துள்ளது.

​கடந்த 2018 முதல் 15900-50400 என்ற முறையான காலமுறை ஊதியக்கட்டில் ஊதியம் பெற்றுவருகின்ற கிராம ஊராட்சி செயலர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. கிராம ஊராட்சி செயலர்களை பொறுத்தமட்டில் 2018 முதல் Pay Commission பரிந்துரைக்கப்பட்ட "C" கிரேடு பணியாளர்களான பதிவுரு எழுத்தர் நிலை ஊதியம் பெற்று வருகிறோம். ஊராட்சி செயலர்களை முறையான இதே ஊதியக்கட்டில் ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு வழங்கப்படுபடும் அரசின் சலுகைகள், ஓய்வூதியத் திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று 2018 முதல் தொடர் போராட்ட இயக்க நடவடிக்கைகள், பேச்சு வார்த்தைகள் நடத்தியிருக்கிறோம்.

34
ஏமாற்றிய திமுக அரசு

12525 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை முதலமைச்சர் அறிவித்துள்ள தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிட வேண்டுமெனக் கேட்டு கடந்த 06.01.2026 முதல் 13.01.2026 வரை 8 நாட்கள் 8000-க்கும் மேற்பட்டோர் மாநில அளவில் தொடர் விடுப்பு எடுத்து சென்னையில் காத்திருந்து தொடர் போராட்டம் நடத்தி வந்தோம். இந்நிலையில் அரசு எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்படும் என உறுதியளித்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் பகுதிநேர பணியாளர்களான சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களோடு இணைத்து ஓய்வூதியம் அறிவித்துள்ளது பேரதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

​எதன் அடிப்படையில் பகுதி நேர பணியாளர்களோடு முறையான காலமுறை ஊதியக்கட்டில் இருக்கின்ற ஊராட்சி செயலர்களை அரசு பார்க்கிறது எனத் தெரியவில்லை. முதலமைச்சர் இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் எடுத்து கிராமங்களின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வருகின்ற ஊராட்சி செயலர்களின் பின்வரும் ஒற்றை கோரிக்கையை அரசாணையாக வெளியிட வேண்டும்’’ என்கின்றனர்.

44
ஊராட்சி செயலாளர்கள் தேர்தலில் திமுகவுக்கு சறுக்கல்?

ஊராட்சி செயலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் கிராமங்கள் தோறும் மக்கள் பணிகள் தொய்வடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. காரணம், தற்போது ஊராட்சி மன்றத்தலைவர்கள் பொறுப்பில் இல்லாததால் அனைத்துப்பணிகளையும் ஊராட்சி செயலாளர்களே முன்னின்று கவனித்து செயல்படுத்தி வருகின்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கிராமங்கள் தோறும் மக்கள் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. அத்தோடு இந்தப்போராட்டம் 2026 தேர்தலுக்கு முன் திமுகவுக்கு பெரும் சவாலாக அமையும் என்கிறார்கள்.

காரணம், மக்களோடு நேரடி பணியில் இருப்பவர்கள் இந்த ஊராட்சி செயலாளர்கள். தங்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றி தராததால் இந்த ஆட்சி மீது அவர்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது. கிராம மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஊராட்சி செயலாளர்கள், திமுக ஆட்சி மீதான இதே அதிருப்தியை வெளிப்படுத்தினால் அது சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அரசுக்கு எதிராக பிரதிபலிக்கும். அது திமுகவுக்கு தமிழக கிராமங்கள் முழுவதும் பின்னடைவை ஏற்படுத்தும். திமுகவின் தேர்தல் வியூகங்கள் வீணாகிவிடும்’’ என்கிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories