தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கொடுக்கும் மத்திய அரசு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்! இதோ முழு விவரம்!

First Published | Nov 14, 2024, 10:59 PM IST

ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் பிசி, எம்பிசி, டிஎன்சி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் குடும்ப வருமானம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.சி, எம்.பி.சி, டி.என்.சி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி (IIT), ஐ.ஐ.எம் (IIM), ஐ.ஐ.ஐ.டி (IIIT), என்.ஐ.டி (NIT) மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் (Central Universities) பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் இன (BC, MBC, DNC) மாணவ, மாணவிகள் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகைக்கென (Fresh and Renewal applications) விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க: School Education Department: அதெல்லாம் உண்மையில்லை! நம்பாதீங்க! அலறும் பள்ளிக்கல்வித்துறை! நடந்தது என்ன?

Latest Videos


குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருந்தால் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருந்தால் மாணவர் ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக மாணவர்களால் செலுத்திய தொகை அல்லது ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகைக்கு 2024-2025-ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் அல்லது http://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship-schemes - என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்கலாம்.

இதையும் படிங்க:  TN Transport Department: நாளை பெளர்ணமி! பக்தர்கள் வசதிக்காக சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து புதுப்பித்தல் விண்ணப்பங்களை அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள், புதிய விண்ணப்பங்களை ஜனவரி 15-ம் தேதிக்குள் சென்னை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!